ரஜினியின் 'ஜெயிலர்' படத்தை தடை செய்ய வேண்டும்: அரசியல் கட்சி தலைவர் ஐகோர்ட்டில் மனு..!

  • IndiaGlitz, [Saturday,August 19 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களால் மிகப்பெரிய ஆதரவுடன் திரையரங்குகளில் வசூல் மழை பெய்து வரும் நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூபாய் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'ஜெயிலர்' படத்தை தடை செய்ய வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதால் ’யுஏ’ சான்றிதழ் வழங்கி இருப்பது தவறு என்றும் 'ஜெயிலர்' திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

நானும் யோகி ஆதித்யநாத்தும் இணைந்து.. உத்தரபிரதேசத்தில் ரஜினிகாந்த் பேட்டி..!

இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலா சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் நிலையில் அவர் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உடன் 'ஜெயிலர்' படம் பார்க்க இருப்பதாக பேட்டி

அடுத்தடுத்து பாஜக பிரமுகர்களை சந்திக்கும் ரஜினிகாந்த்.. அடுத்த சந்திப்பு முதல்வர் என தகவல்..!

இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்தடுத்து பாஜக பிரமுகர்களை சந்தித்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக உத்தரப் பிரதேசம் மாநில முதல்வரை சந்திக்க இருப்பதாக

'கைதி'யை முந்துகிறதா 'ரோலக்ஸ்'? லோகேஷ் கனகராஜின் மாஸ் திட்டம்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடித்து முடித்துள்ள 'லியோ' படத்தின் தொழில்நுட்ப பணியில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை திட்டமிட்டபடி அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட வேண்டும் என

நம்மல்லாம் ஓடக்கூடாது, திரும்பி நின்னு அடிக்கணும்.. 'ரங்கோலி' டிரைலர்..!

புதுமுகங்கள் நடித்த 'ரங்கோலி' திரைப்படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

சீட் பெல்ட் போட்டதால் உயிர் தப்பினேன்.. விபத்தில் சிக்கிய சீரியல் நடிகையின் வீடியோ..!

சன் டிவி, விஜய் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடித்து வரும் நடிகை சமீபத்தில் விபத்தில் சிக்கியதாகவும், சீட் பெல்ட் போட்டதால் உயிர் தப்பியதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ