என்னால் தான் 'லியோ' பாடலுக்கு சப் டைட்டில் போடப்பட்டது: பெண் அரசியல்வாதி ட்விட்..!

  • IndiaGlitz, [Wednesday,June 28 2023]

தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படத்தில் இடம் பெற்ற ’நா ரெடி’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடல் ஒரு சிலரால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. இந்த பாடலில் உள்ள சில வரிகள் மற்றும் இந்த பாடல் முழுவதும் விஜய் சிகரெட்டை வாயில் வைத்ததற்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவி ராஜேஸ்வரி பிரியா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பாடல் வெளியான தினத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தார். அவர் அதில் கூறியிருந்ததாவது:

சிகரெட் (Tobacco Lobby) நிறுவனங்களின் விளம்பர தூதராக நடிகர் விஜய் உள்ளார். ரசிகர்களுக்கு நீங்கள் ரோல் மாடல் என்பதை மறந்து தொடர்ந்து பொறுப்பில்லாமல் இருப்பது சரியா? குழந்தைகளையும் பாதிக்கும் இந்த காட்சி.
திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்’ என்று பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று முதல் ’நா ரெடி’ பாடலில் புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது, புற்றுநோயை உருவாக்கும் என்ற சப்டைட்டில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அதே அரசியல்வாதி ராஜேஸ்வரி தன்னால் தான் இந்த சப்டைட்டில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஆட்டம் கண்ட லியோ படக்குழு !!

கடுமையான எனது கண்டனத்திற்கு பிறகு
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என அவசரமாக வீடியோவில் பதிவேற்றியது.

வெற்றி நமதே!!!
இன்னும் தொடரும்…

ஏற்கனவே தன்னால் தான் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும், தன்னால் 5000 மதுக்கடைகளையும் மூட வைக்க முடியும் என்று ஒரு ட்விட்டில் இவர் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திமிறி எழுங்கள்.. 'இந்தியன் 2' படம் பார்த்த பின் ஷங்கருக்கு அறிவுரை கூறிய கமல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என செய்திகள் வெளியானது

ஜூலை 1 முதல் கோலாகலமாக தொடங்கும் சரிகமப லிட்டில் சேம்ப்:  முதல் வார ஸ்பெஷல் என்ன?

ஜூலை 1 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சேம்ப் கோலாகலமாக தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செர்பியாவில் மியூசிக் வைப் செய்த நடிகை சமந்தா… வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

சிட்டாடல் வெப் சீரிஸ் படப்பிடிப்புக்காக நடிகை சமந்தா மற்றும் அவரது குழுவினர் செர்பியா நாட்டிற்குச் சென்றிருந்த நிலையில் தற்போது அங்குள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர்

LGBTQIA+ பற்றிய விளக்கம் தெரியுமா? ஜுன்- Pride Month இல் தெரிந்து கொள்வோம்…

பாலினம் (Sexual) மற்றும் உடல் ரீதியான பாலின ஈர்ப்பு (Sexual orientation) குறித்த விஷயங்களில் எப்போதுமே நமக்கு ஒரு குழப்பம் இருந்து வருகிறது

'மாமன்னன்' படத்தின் முதல் விமர்சனம்.. தனுஷ் என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனமாக இந்த படத்தை பார்த்த தனுஷ் தனது ட்விட்டர்