'எதற்கும் துணிந்தவன்' படத்தை திரையிட வேண்டாம்: பிரபல அரசியல்வாதி அறிக்கை

சூர்யா நடித்த ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தை கடலூர் மாவட்டத்தில் திரையிட வேண்டாம் என பாமக மாநில செயலாளர் விஜயவர்மன் என்பவர் அறிக்கை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 3ஆம் தேதி வெளியான திரைப்படம் ’ஜெய்பீம். ஞானவேல் இயக்கிய இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து நடிகர் சூர்யா நடித்துள்ளார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள, உண்மை சம்பவம் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க, கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க, அந்தோணிசாமி என்ற தலித் கிறிஸ்தவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து, வன்னியர்களின் அடையாளமாக அக்னி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி, காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தைச் சார்ந்தவர் என்று ஒட்டுமொத்த வன்னிய மக்கள் சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல் காட்டியுள்ளனர் .

சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சைப் படுத்தும் விதமாகவும் வன்முறையாளர்களாக தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னிய மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

'அரபிக்குத்து' பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார்? சிவகார்த்திகேயன் தகவல்!

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து'  என்ற பாடல்

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்துவிட்டோம்: புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த்த தனுஷ் 

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இணைந்து விட்டோம் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி அளித்த பதில்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் கோரிக்கைக்கு இசைஞானி இளையராஜா பதிலளித்துள்ளதை அடுத்து அவரது பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது 

மீண்டும் தொடங்குகிறதா 'வேட்டை மன்னன்'? சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்து!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்பு நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 'வேட்டை மன்னன்' என்ற திரைப்படம் உருவாகி வந்த நிலையில் திடீரென அந்த படம் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர்தான் நெல்சன்

மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் சன்னிலியோன்: ஹீரோ யார் தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன் அவ்வபோது தென்னிந்திய திரையுலகில் நடித்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.