கூத்தாடிகளை கொண்டாட வேண்டாம்.. விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம்: அரசியல் கட்சி தலைவர்..!

  • IndiaGlitz, [Monday,March 11 2024]

கூத்தாடிகளை கொண்டாட வேண்டாம் என்று கூறிய அரசியல் கட்சி தலைவர், இதை சொல்வதால் விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடையாறு அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசிய போது சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

நேற்று ஒரு கதாநாயகன் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகிறார், அவருடைய கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, உறுப்பினர் சேர்க்கை நடந்து வரும் நிலையில் அவரது இணையதளமே முடங்கி விட்டதாக சொல்கிறார்கள். 50 லட்சம் பேர் உறுப்பினராக இணைந்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

கூத்தாடிகளை கொண்டாடும் மனநிலை மாற வேண்டும். நான் பேசி சென்ற பிறகு என்ன விஜய் ரசிகர்கள் கல்லால் அடிக்க கூட வாய்ப்பு உண்டு, அவர்களெல்லாம் ரசிகர்கள், அதனால் அப்படி நடந்து கொள்ளட்டும், அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை’ என்று பேசி உள்ளார். விஜய் குறித்து அவர் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ரூ.100 கோடி.. ரூ.150 கோடி.. அடுத்தடுத்து 2 மலையாள படங்களின் சாதனை வசூல்.. ஏக்கத்தில் தமிழ் சினிமா..!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சூப்பர் ஹிட் என்று சொல்லும் அளவுக்கு எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில்  மலையாள திரை உலகில் அடுத்தடுத்து இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் 100 கோடி மற்றும் 150

அட்லியின் அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? குரு ஷங்கரை முந்திவிட்டரா?

அட்லி இயக்கத்தில் உருவான 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூல் செய்த நிலையில் அட்லியின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மெகா ஸ்டார் படத்தில் இரட்டை வேடத்தில் த்ரிஷா ? இதுதான் முதல்முறையா?

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா தற்போதும் அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் பிசியான நடிகையாக உள்ளார்

17 வருடத்தில் நான் பெற்ற முதல் பாராட்டு.. ஜிவி பிரகாஷின் நெகிழ்ச்சியான பதிவு..!

 நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கடந்த 17 வருடத்தில் முதல் முறையாக  ஏஆர் ரகுமான் அவர்களிடம் பாராட்டு பெறவில்லை என்றும், முதல்முறையாக இப்போதுதான் அவரிடம் இருந்து பாராட்டு கிடைத்துள்ளது

தமிழ் பொறுக்கி.. மலையாள பொறுக்கி.. இரண்டும் ஒரே சாக்கடையில் ஊறும் தவளைகள்: தமிழ் இயக்குனர்..!

சமீபத்தில் 'மஞ்சம்மெல் பாய்ஸ் என்ற திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் அவரது விமர்சனத்திற்கு  தமிழ் இயக்குனர் ஒருவர்