முதல்வர் பதவியில் சசிகலா. அரசியல் தலைவர்களின் ஆதரவும் எதிர்ப்பும்

  • IndiaGlitz, [Monday,February 06 2017]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பின்னர் முதல்வர் பதவியை ஏற்ற ஓ.பன்னீர்செல்வம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு பிரச்சனை, மத்திய அரசுடன் இணக்கமான சூழ்நிலை, எதிர்க்கட்சிகளுடன் அரவணைப்பு என சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில் நேற்று திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். எனவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா விரைவில் முதல்வர் பதவியில் அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சசிகலாவுக்கு பிரபல அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் சசிகலா முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து கூறியதை பார்ப்போம்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின்: சசிகலாவை முதலமைச்சராக மக்கள் ஏற்கமாட்டார்கள்

எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன்: சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வாகியது குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை

நடிகர் ஆனந்தராஜ்: சட்டமன்ற தலைவராக சசிகலாவை தேர்வு செய்தது அவசர முடிவு

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன்: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு எனது வாழ்த்துக்கள்

இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன்: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை வரவேற்கிறேன்

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரெங்கசாமி: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வுக்கு எனது வாழ்த்துக்கள்

தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது உட்கட்சி விவகாரம்

த.மா.கா.தலைவர் வாசன்: முதலமைச்சரை மாற்ற வேண்டியதன் அவசியம், அவசரம் குறித்து அதிமுக விளக்கம் அளிக்க வேண்டும்

பாமக நிறுவனர் ராமதாஸ்: அதிமுக சட்டமன்ற தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்: மக்கள் கருத்துக்கு எதிராக தமிழக அரசும், அதிமுகவும் செயல்படுகிறது

சசிகலாவை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் முழு அளவில் ஏற்றுக்கொண்டாலும், பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அவரை முதல்வராக ஏற்றுக்கொள்வார்களா? என்பதும், முதல்வராக சசிகலாவின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதும் போகப்போகத்தான் தெரியும்.

More News

ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது இளையதளபதியின் 'பைரவா'

பொங்கல் விருந்தாக கடந்த மாதம் 12ஆம் தேதி வெளிவந்த இளையதளபதி விஜய்யின் 'பைரவா' திரைப்படம் 25 நாட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ள நிலையில் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...

விஜய்சேதுபதியுடன் இணையும் இளம் ஹீரோ

கடந்த ஆண்டு அதிக படங்களை வெளியிட்டவர் என்ற பெருமை பெற்ற விஜய்சேதுபதி, இந்த ஆண்டும் அவர் ஒப்பந்தமாகிவரும் எண்ணிக்கையை பார்க்கும்போது அதிக படங்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதி நடிப்பில் 'புரியாத புதிர்', கவண், விக்ரம் வேதா, கருப்பன், 96, போன்ற படங்கள் தயாராகி வரும் நிலையில் தற்போது இளம் ஹீரோ ஒī

மீண்டும் மாணவர்களுடன் இணைந்த ராகவா லாரன்ஸ்

உலகையே திரும்பி பார்க்க வைத்த சமீபத்திய நிகழ்ச்சி மெரீனாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு புரட்சி போராட்டம். இந்த போராட்டத்தின் பயனாக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டத்தை இயற்றின...

காதலர் தினத்தில் ஏ.ஆர்.ரஹ்மான். 'அழகியே' அடுத்து 'வான்'

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'காற்று வெளியிடை' படத்தின் 'அழகியே' சிங்கிள் பாடல் கடந்த 2ஆம் தேதி வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

தமிழகத்துக்குப் புது முதல்வர். ஓபிஎஸ் பதவி விலகல்

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணமடைந்தபின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகப் போகிறார் என்றும்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி;கே.சசிகலா தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்று கட்சியின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது...