ரஜினியின் வீட்டுக்கு சென்ற பிரபல பாஜக பிரமுகர்! தமிழக அரசியலில் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,November 07 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதால் அவரை அவ்வப்போது பல்வேறு கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் நேரில் சந்தித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மத்திய அரசு ரஜினிகாந்த் அவர்களுக்கு கோல்டன் ஜூபிலி விருது வழங்கியதை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக பிரமுகருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

பாஜகவின் ஆதரவாளராக ரஜினிகாந்த் செயல்பட்டு வருவதாக ஒருசிலர் குற்றம் சாட்டி வரும் நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் ரஜினியின் வீட்டுக்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘50 வது சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்படும் ஐகான் கோல்டன் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர் இன்னும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்’ என்று கூறியுள்ளார்.

More News

19 வருடங்களுக்கு பின் வெளிவரும் கமல்ஹாசன் பட டிரைலர்!

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மிகச்சிறப்பாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்தக் கொண்டாட்டத்தை கமல் ரசிகர்கள் இன்று முதலே உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர் 

ஒரே படத்தில் ரஜினி, கமல், மோகன்லால், சல்மான்கான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள 'தர்பார்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

புரோட்டா சூரி பாணியில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டியவர் பலி!

சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடி குழு' என்ற படத்தில் நடிகர் சூரி 50 புரோட்டா சாப்பிடுவதாக பந்தயம் கட்டும் ஒரு காமெடி காட்சி இடம் பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

படித்து முடிக்கும் முன்பே ரூ.1.45 கோடி சம்பளத்தில் வேலை: டெல்லி மாணவிக்கு அதிர்ஷ்டம்

இந்தியாவில் உள்ள ஒரு சில தரமான கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, அவர்கள் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் உலகின் முன்னணி நிறுவனங்களில்

பாஜகவில் இணைந்த விஜய் பட நடிகை

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு மாறிவரும் அரசியல்வாதிகள் அதிகரித்து வருகின்றனர்.