தளபதியின் மெர்சலுக்கு தமிழிசையை அடுத்து மத்திய அமைச்சரும் எதிர்ப்பு

  • IndiaGlitz, [Friday,October 20 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி உள்பட ஒருசில வசனங்களுக்கு நேற்று எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்தார்.

இந்த நிலையில் தமிழிசையை அடுத்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தற்போது இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், 'உண்மைக்கு புறம்பான காட்சிகள் மற்றும் வசனங்களை மெர்சல் படத்தில் இருந்து நீக்க வேண்டும்.  நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது என நினைக்கவில்லை.  திரைப்படத்துறையை தவறாக பயன்படுத்தி ஒரு சிலர் அரசியல் செய்ய கூடாது. மெர்சலில் அரசியல் விமர்சனங்களை கூறியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல' என்று கூறினார்.

'மெர்சல்' படத்திற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது அந்த படத்திற்கு கிடைத்த இலவச விளம்பரமாக கருதப்படுகிறது.

More News

நான் 'மெர்சலாயிட்டேன்': 'மெர்சல்' படக்குழுவுக்கு குஷ்பு பாராட்டு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்திற்கு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மட்டுமின்றி திரையுலகினர்களும் பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கேரளாவை அடுத்து தளபதி விஜய்யின் அடுத்த கோட்டை

விஜய்க்கு தமிழகத்தில் இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறித்து யாருக்கும் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. விஜய்யின் படங்கள் வெளியாகும் தினம் ஒரு திருவிழா தினமாக மாறுவதில் இருந்தே

கார்த்திக் நரேனின் 'நரகாசுரன்' ரிலீஸ் எப்போது?

கார்த்திக் நரேன் இயக்கிய முதல் படமான 'துருவங்கள் பதினாறு' மிகப்பெரிய வெற்றியை பெற்று அனைத்து தரப்பினர்களின் பாராட்டுக்களை பெற்ற நிலையில் அவர் தற்போது 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

என்ன திருப்பி குடுக்கறதுனு தெரியல: காளிவெங்கட்டின் ஆனந்தக்கண்ணீர்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தில் விஜய்யை அடுத்து அனைவரையும் கவர்ந்த ஒரு கேரக்டர் ஆட்டோ டிரைவராக நடித்த காளி வெங்கட் கேரக்டர்தான்.

முதல்முறையாக வெளியான தளபதியின் தபால்தலை

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு ஒருசில கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும் பெருவாரியான ஊடகங்கள், சமூகவலைத்தள பயனாளிகள் அளித்த பாசிட்டிவ் விமர்சனங்கள்