'பொன்னியின் செல்வன் 2' படத்தின் முதல் அப்டேட்.. செம போஸ்டர் ரிலீஸ்..!

  • IndiaGlitz, [Friday,March 17 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏப்ரல் மாதம் முழுவதுமே படக்குழுவினர் புரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது முதல் புரமோஷன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடலான 'அகநக’ என்ற பாடல் வரும் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளதாகவும், இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடல் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

More News

'மீண்டும் சந்திப்போம்': சஞ்சய் தத்தை வழியனுப்பி வைத்த 'லியோ' படக்குழு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்து கொண்டார் என்பதை

'நீங்கள் வெர்ஜினா'? ரசிகர் கேட்ட கேள்விக்கு ஸ்ருதிஹாசனின் பதிலடி..!

நடிகை ஸ்ருதிஹாசனிடம் நீங்கள் வெர்ஜினா? என கேள்வி கேட்ட ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமாகி 27 வருடங்கள்.. கணவருடன் கமல்-ரஜினி பட நாயகியின் புகைப்படம்..!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் திருமணமாகி 27 வருடங்கள் ஆனதை அடுத்து தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம்

அதுக்குள்ளவா..? ஜெயம் ரவியின் 'அகிலன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் அதற்குள் இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது ரசிகர்களுக்கு

சொந்த வீடு கட்டிய விஜய் டிவி பிரபலம்.. திருமண மண்டபம் போல் பிரமாண்டமான வீடு..!

விஜய் டிவி பிரபலம் ஒருவர் சொந்த வீடு கட்டி உள்ள நிலையில் இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் நிகழ்ச்சியின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து