close
Choose your channels

ஆரம்பமாகிறது 'பொன்னியின் செல்வன் 2' புரமோஷன்.. முதல் அப்டேட் இதுதான்..!

Wednesday, February 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

‘பொன்னியின் செல்வன்; இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இறுதி கட்ட போஸ்ட் ப்ராடக்ட்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் புரோமோஷன் பணிகளையும் தொடங்க பட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

முதல் கட்டமாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 14ஆம் தேதி அதாவது காதலர் தினத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாடலை இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்து பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வனுக்கும் வானதிக்குமான காதல் பாடல் என்றும், இந்த பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தை பார்த்த அனைவருமே இரண்டாம் பாகத்தையும் பார்ப்பார்கள் என்பதால் ‘பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் முதல் பாகம் போலவே ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.