KDM டெலிவரி.. அமெரிக்காவில் இன்றே வெளியாகிறது 'பொன்னியின் செல்வன் 2'..!

  • IndiaGlitz, [Thursday,April 27 2023]

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் சிறப்பு காட்சிகள் இன்று இரவே வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன

இந்த படத்தின் ரிலீஸ் பணிகள் அனைத்தும் பக்காவாக திட்டமிட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா உட்பட வெளிநாட்டு திரையரங்குகளுக்கு KDM டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் திட்டமிட்டபடி ’பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்காவில் பிரீமியம் காட்சிகள் இன்று இரவு திரையிடப்பட உள்ளது என்றும் அதற்கான டிக்கெட் புக்கிங் பணிகளும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளை காலை ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெளியாக இருப்பதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் எதிர்பார்ப்பை விட பல மடங்கு இருந்ததால் இரண்டாம் பாகத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இந்த எதிர்பார்ப்பை இந்த படம் நிச்சயம் பூர்த்தி செய்யும் என்றும் கூறப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

More News

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டிய ரசிகர்.. என்ன காரணம் கூறினார் தெரியுமா?

நடிகை சமந்தாவுக்கு ஆந்திராவில் உள்ள ரசிகர் ஒருவர் தனது வீட்டில் கோயில் கட்டிய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

நீ வா நண்பா, நாம் சேர்ந்து பயணிப்போம்.. விஷால் இயக்கத்தில் விஜய் படம்..!

 புரட்சித் தளபதி விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டீசரை தளபதி விஜய் வெளியிட உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும் ஹீரோவான நடிகர் சதீஷ்.. டைட்டில் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் 'நாய் சேகர்' என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க

நேபாளம் ஹோட்டலில் செஃப் ஆக மாறிய அஜித்.. வைரல் வீடியோ..!

நடிகர் அஜித் மீண்டும் பைக் பயணம் செய்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் நேபாள நாட்டில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

விஷால் படத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்.. இன்று செம விருந்து..!

விஷால் நடிக்கும் படத்தை புரமோஷன் செய்ய விஜய் ஒப்புக் கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.