close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2' இசை வெளியிட்டு விழா: கலந்து கொள்ளும் பிரபலம் இவர்தான்..!

Monday, March 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இந்த விழாவில் இந்த படத்தின் டிரைலரும் வெளியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தான் இந்த படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ’பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். என்பது தெரிந்ததே..

மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேலும் பிரபலங்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் யார் யார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.