close
Choose your channels

அர்ஜூன் தாஸ் உடன் காதலா? 'பொன்னியின் செல்வன்' நடிகையின் வைரல் பதிவு

Wednesday, January 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் உடன் ’பொன்னியின் செல்வன் நடிகைக்கு காதல் என்பது அவரது சமீபத்தில் பதிவின் மூலம் தெரிய வந்துள்ளது.

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ மற்றும் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ உள்பட பல படங்களில் வில்லன்களாக நடித்தவர் அர்ஜுன் தாஸ் என்பதும் இவர் தற்போது ஐந்து படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் லவ் என்ற எமோஜியையும் பதிவு செய்துள்ள நிலையில் இருவருக்கும் காதல் தான் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் திரையுலகில் பல நட்சத்திர காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்ட நிலையில் மேலும் ஒரு காதல் ஜோடியாக அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இருப்பார்களா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

2022 ஆம் ஆண்டை பொருத்தவரை ஐஸ்வர்யா லட்சுமிக்கு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. ‘பொன்னின் செல்வன்’ மற்றும் ‘கட்டா குஸ்தி’ ஆகிய இரண்டு படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் கோலிவுட்டின் ராசியான நடிகையாக உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.