'பொன்னியின் செல்வன்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்!

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட ’பொன்னின் செல்வன்’ திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார் என்பதும் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் புரமோஷன் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் சென்சார் தகவல் கசிந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 167 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 47 நிமிடங்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘தேவராளன் ஆட்டம்’ என்ற பாடலின் லிரிக் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏஆர். ரஹ்மான் கம்போஸ் செய்த இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார் என்பதும், யோகி சேகர் இந்த பாடலை பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

கேட்டவுடனே ஒரு லட்ச ரூபாய் அக்கவுண்டில் போட்ட பிரபல நடிகர்: போண்டாமணிக்கு குவியும் உதவிகள்!

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காமெடி நடிகர் போண்டா மணிக்கு உதவிகள் குவிந்து வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் உதவி கேட்ட உடனே ஒரு

மூக்குத்தி குத்தியவரை படாதபாடு படுத்திய அஜித் பட நாயகி.. வீடியோ வைரல்

 அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகை மூக்குத்தி குத்தியவரை படாத பாடு படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அப்படியே சமந்தா மாதிரியே இருக்கிங்க.. கெளதமி மகளுக்கு குவியும் வாழ்த்துக்கள்!

நடிகை கெளதமியின் மகள் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 'அப்படியே அச்சு அசலாக சமந்தா மாதிரியே இருக்கிறீர்கள்

அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கெளதம் மேனன்? அவரே அளித்த தகவல்!

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌதம் மேனன் மீண்டும் அஜித்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா திருமண வீடியோவை நான் இயக்கவில்லை: கெளதம் மேனன்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் இந்த வீடியோவை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியதாக செய்திகள் வெளியானது.