close
Choose your channels

லைகாவின் 'பொன்னியின் செல்வன்': ஆதித்த கரிகாலனின் 'சோழா சோழா' பாடல் ரிலீஸ்

Friday, August 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தை மணிரத்னம் இயக்கி முடித்துள்ளார் என்பதும் இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பொன்னி நதி என்ற பாடலும் டீசரும் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடலான ‘சோழா சோழா’ என்ற பாடல் வெளியாகி உள்ளது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில், இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளில் உருவான இந்த பாடலை சத்யபிரகாஷ், விஎம் மகாலிங்கம் மற்றும் நகுல் அபியங்கர் ஆகியோர் பாடியுள்ளனர்.

சமீபத்தில் வெளியான ‘பொன்னி நதி’ பாடல் வந்தியத்தேவனின் பெருமைகளை கூறிய நிலையில் இந்த ’சோழா சோழா’ பாடல் கரிகால் சோழனின் பெருமை கூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதும், இந்த பாடலின் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.