close
Choose your channels

விஜய்யின் 'வாரிசு' படத்துடன் கனெக்சன் ஆனது 'பொன்னியின் செல்வன்': எப்படி தெரியுமா?

Sunday, August 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்துடன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படம் கனெக்சன் ஆனது குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விக்ரம், கார்த்தி மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த படத்தின் இரண்டாவது பாடலை பார்த்ததும் இந்த படத்தின் மீது ஈர்ப்பு கொண்ட தில் ராஜூ, இந்த படத்தை தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்யும் உரிமையை மிகப் பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தில்ராஜூ அவர்கள் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் தெலுங்கு உரிமையை பெற்றிருப்பதை அடுத்து இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.