close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல்!

Friday, January 10, 2020 • தமிழ் Comments

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் வரலாற்றுத் திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்து நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம் ரவி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன

இந்த படத்தில் வந்தியதேவன் கேரக்டரில் கார்த்தியும், ராஜராஜ சோழனாக கேரக்டரில் ஜெயம் ரவியும் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கார்த்தி அடுத்ததாக இரும்புத்திரை இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கும் படத்திலும், ஜெயம் ரவி ’அகமது’ இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்திலும் நடிக்க தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடிக்கும் விக்ரம் மற்றும் நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் படக்குழுவினர்களிடமிருந்து செய்திகள் கசிந்துள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz