close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' படத்தில் பயன்படுத்தியது உண்மையான தங்கநகைகளா? வைரல் வீடியோ

Tuesday, August 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தில் அரசர்கள், அரசிகள், இளவரசிகள் உட்பட பல்வேறு கேரக்டர்கள் இருப்பதால் இந்த படத்தில் உள்ள கேரக்டர்கள் அணியும் நகைகள் எண்ணிக்கையும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற அரசர் படத்தில் பொதுவாக டூப்ளிகேட் நகைகள்தான் பயன்படுத்தப்படும்.

ஆனால் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் உண்மையான தங்க நகைகள் பயன்படுத்தியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. பிரபல ஜூவல்லரி நிறுவனம் ஒன்று இந்த படத்திற்கு தேவையான அனைத்து நகைகளையும் கொடுத்து உதவியதாகவும் இதனை அடுத்து இந்த நிறுவனம் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ஜூவல்லரி பார்ட்னர் என லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய், த்ரிஷா உள்பட அனைவருமே அணிந்திருந்த நகைகள் உண்மையான தங்க நகைகள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் தற்போது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.