'பொன்னியின் செல்வன்' ஓடிடி ரிலீஸ் தாமதம் ஏன்?

பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் ஓடிடியில் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.

பொதுவாக பெரிய நடிகர்கள் நடித்த படங்கள், பிரமாண்ட இயக்குனர்களின் படங்கள் ஒரு மாதத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகியும் இன்னும் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகவில்லை.

அதற்கு முக்கிய காரணம் ’பொன்னியின் செல்வன்’ இன்னும் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஏற்கனவே உலகம் முழுவதும் ரூ.480 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் ரூ.500 கோடி வசூலை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரையரங்குகளில் பொன்னியின் செல்வன்’ நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் தான் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. எனினும் நவம்பர் இரண்டாவது வாரம் அதாவது நவம்பர் 11ஆம் தேதி இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களின் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் ரூபாய் 125 கோடிக்கு பெற்றுள்ளதாக கூறப்பட்டது.