close
Choose your channels

வந்தியத்தேவனை மதிக்காத அந்த இருவர்: 'பொன்னி நதி' மேக்கிங் வீடியோ

Thursday, August 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பொன்னி நதி பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் இந்த பாடலில் வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்த கார்த்தி மற்றும் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்த பிருந்தா மாஸ்டர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக கார்த்தி இந்த வீடியோவில் கூறும்போது வந்தியத்தேவனை டோட்டலாக மதிக்காதவர்கள் இருவரில் ஒருவர் பூங்குழலி என்றால் இன்னொன்று குதிரை. அந்த குதிரையை செய்யும் சேட்டைகளை இந்த பாடலில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

இந்த பாடலின் டியூனை ஏ.ஆர்.ரஹ்மான் போட்டவுடனே நான் ஆட ஆரம்பித்து விட்டேன் என்றும் கார்த்திக்காக சில ஸ்பெஷல் நடன அமைப்புகளை அமைத்துள்ளோம் என்றும் கூறினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos