முன்பதிவில் மட்டுமே கோடிகளை குவித்த 'பொன்னியின் செல்வன்': வசூல் சாதனை செய்யுமா?

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் நேற்று இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் நாள் டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாகவும், முதல் நாள் டிக்கெட் வசூல் மட்டும் ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் முன்பதிவு மூலம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மற்ற மொழிகளில் ’பொன்னியின் செல்வன்’ வெளியாவதால், இந்திய அளவில் இந்த படத்தின் முதல்நாள் முன்பதிவு மட்டும் சுமார் 8 கோடி அளவுக்கு வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அமெரிக்காவில் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று முன்பதிவில் இருந்து தெரிய வருகிறது. முதல் நாளில் அமெரிக்காவில் முன்பதிவு வசூல் மட்டுமே ரூ.3.25 கோடி என கூறப்படுகிறது. அதேபோல் கனடா, மலேசியா, சிங்கப்பூர் உள்பட பல நாடுகளிலும் ’பொன்னியின் செல்வன்’ முன்பதிவு விறுவிறுப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவில் மட்டுமே கோடிகளை குவித்துள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் இந்திய திரையுலகில் இந்த சாதனை அசைக்க முடியாததாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

More News

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த புதுமண தம்பதிகளா? சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்து சீசன்கள் முடிவடைந்து வரும் அக்டோபர் மாதம் 6வது சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய் மகளுக்கும் வாய்ப்பு கொடுத்த மணிரத்னம்?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும்

வேற லெவல் கிளாமர் போஸ் கொடுத்த பாடகி ஜொனிதா காந்தி.. வைரல் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஜொனிதா காந்தி தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவல் கிராமர் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

ஐஸ்வர்யா ராயுடன் செல்பி.. வர்ணித்து கவிதை எழுதிய 'பொன்னியின் செல்வன்' நடிகர்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வரும் 30ஆம் தேதி தமிழ் உள்பட 5 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

'இந்தியன் 2' படத்திற்காக கார் பரிசளித்த கமல்.. யாருக்கு கொடுத்தார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.