'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு குறித்த அப்டேட் தெரிவித்த பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது என்பது தெரிந்ததே.

இந்த படப்பிடிப்பில் முக்கிய நடிகர்களுடன் நடிகர் ரியாஸ் கானும் கலந்து கொண்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தாய்லாந்து படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட ரியாஸ்கான் ஐதராபாத் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் என்பதும் இந்த படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தன் சமூக வலைத்தளத்தில் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் இதனை அடுத்து தான் சென்னை திரும்பி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் ரவிவர்மன் ஒளிப்பதிவில், தோட்டாதரணி கலை இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

More News

கலவரத்தை தூண்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்..?! காவல் துறையை துளைத்தெடுத்த நீதிபதி முரளிதர்.

பாஜக தலைவர் இப்படி பேசியது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று மேத்தா குறிப்பிட்டார். நீதிபதி முரளிதர் எதை செய்வார் என்று மேத்தா பயந்தாரோ அதையே இன்று முரளிதர் சிறப்பாக செய்து முடித்தார்.

டெல்லி கலவரம் ஏற்பட்டது இதனால்தான்: ரஜினியின் சகோதரர் பேட்டி

டெல்லியில் கடந்த மூன்று நாட்களாக கட்டுக்கடங்காத வகையில் வன்முறை, கலவரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கலவரத்தில் காவல்துறையினர் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

பாஜக, கபில் மிஸ்ரா கலவரத்தை தூண்டியது தவறு..! கவுதம் கம்பீர்.

கௌதம் கம்பீர், கபில் மிஸ்ரா ஆகிய இருவருமே பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள். சொந்த கட்சியைச் சேர்ந்தவர்மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்பீர் பேசியிருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சௌதி அரேபியாவில் முதல் முறையாகப் பெண்களுக்கான கால்பந்து லீக் போட்டிகள்!!!

சௌதி  அரேபியாவில் வாழ்க்கை முறைகள் பெரும்பாலும் இஸ்லாமிய சட்ட விதிகளின் படியே கடைப்பிடிக்கப் படுகிறது.

மார்ச் 5ல் கமல்-ரஜினி இணைப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக அண்ணாத்த' படத்துடன் இன்னொரு படத்திலும் நடிக்க திட்டமிட்டு உள்ளதாக ஏற்கனவே வெளியான செய்திகளை பார்த்தோம்.