'பொன்னியின் செல்வன்' செகண்ட் சிங்கிள்: பாடல் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ’பொன்னி நதி’ ரிலீசாகி மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான ‘சோழா சோழா’ என்று என்ற பாடல் வரும் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகிய இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பொன்னி நதி பாடல் போலவே இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா விரைவில் நடைபெற உள்ளது என்பதும் இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
 

More News

'தேங்க் யூ ஷங்கர் சார்': அதிதி ஷங்கரின் பிறந்தநாள் வாழ்த்து டுவிட்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன், லைகா நிறுவனம் உள்பட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அதிதியிடம் தோல்வி அடைந்த கார்த்தி: வைரல் வீடியோ

கார்த்தி, அதிதிஷங்கர் நடித்த 'விருமன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் மற்றும் அவர்களது

54 வயதில் திருமணமா? பிரபல தமிழ் நடிகர் விளக்கம்!

 54 வயதான பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம் என ஒரு சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த செய்திக்கு அந்த நடிகர் விளக்கமளித்துள்ளார்.

'விக்ரம்' ரிலீஸ் ஆன அதே தேதி: மீண்டும் ரூ.500 கோடி மேஜிக் நடக்குமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சுமார் 500 கோடி வசூல்

ஒரே ஷெட்யூலில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்? டிசம்பரில் இன்னொரு படம்!

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.