close
Choose your channels

ஆசிய திரைப்பட விழாவில்  'பொன்னியின் செல்வன்' படக்குழு: விருதுகளை குவிக்குமா?

Saturday, March 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாளை அதாவது மார்ச் 12ஆம் தேதி ஹாங்காங்கில் ஆசிய திரைப்பட விருது விழா நடைபெற உள்ளதை அடுத்து இந்த விழாவில் பங்கேற்க ’பொன்னின் செல்வன்’ படக்குழு ஹாங்காங் செல்ல உள்ளனர்.

16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் 6 விருதுகளுக்கு பதில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படத்துக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைகா ஜிகே தமிழ்க்குமரன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோர்களுடன் எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத் மற்றும் ரவிவர்மன் உள்ளிட்டோர் ஹாங்காங் பயணம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விருது வழங்கும் விழாவில் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ஆறு விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அது குறித்த விபரங்கள் இதோ:

சிறந்த திரைப்படம்: பொன்னியின் செல்வன் -பாகம் 1

சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி)

சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்)

சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்)

சிறந்த ஆடை வடிவமைப்பு: ஏகா லக்கானி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.