'கமல்ஹாசன் 234' படத்தில் இணைந்த 'பொன்னியின் செல்வன்' பிரபலம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘கமல்ஹாசன் 234’ திரைப்படத்தில் ’பொன்னியின் செல்வன்’ பிரபலம் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசனின் 234வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கமல்ஹாசன் 234வது படத்தில் தற்போது 'பொன்னியின் செல்வன்’ ’வெந்து தணிந்தது காடு’ ’இந்தியன் 2’ உள்பட பல படங்களில் திரைக்கதை வசனம் எழுதிய ஜெயமோகன் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் மற்றும் ஜெயமோகன் ஆகிய இருவரும் இணைந்து ’கமல் 234’ திரைப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினிகாந்த் பிறந்த நாளில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

ரஜினி பிறந்த நாளில் தனுஷ் போட்ட டுவிட் என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'இப்ப இருந்து நான் சொல்றதை மட்டும் தான் நீ கேட்கணும்': விஜய் ஆண்டனியின் 'தமிழரசன்' டிரைலர்

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான 'தமிழரசன்' படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிகரமாக 100வது நாள்: ரவீந்தரின் நெகிழ்ச்சி பதிவு!

பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து 100 நாள் ஆனதை அடுத்து இது குறித்து நெகிழ்ச்சியான பதிவை தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ளார். 

'என்னது மைனாவுக்கு ஒருநாள் சம்பளம் இவ்வளவா? அவரே சொன்ன தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மைனாவின் சம்பளம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.