கோவை வந்திறங்கிய 'பொன்னியின் செல்வன்' டீம்..  விக்ரம் வெளியிட்ட செம்ம புகைப்படம் ..!

  • IndiaGlitz, [Sunday,April 16 2023]

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் 28ஆம் தேதி தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று இந்த படத்தின் ஆந்தம் பாடல் வெளியான நிலையில் இந்த பாடல் வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ’பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர். இன்று மாலை 4:30 மணிக்கு கோயம்புத்தூரில் பிரமாண்டமாக நடைபெற உள்ள புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 'பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் சற்றுமுன் கோவை வந்து இறங்கி உள்ளனர்.

இதுகுறித்து நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'கோயம்புத்தூர்!! இதோ வர்ரோங்கண்ணா!! என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

More News

2வது திருமணம் செய்து கொண்டாரா 'பூவே உனக்காக' அஞ்சு அரவிந்த்? அழகிய குடும்ப புகைப்படங்கள்..!

'பூவே உனக்காக' என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அஞ்சு அரவிந்த், முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது அழகிய குடும்ப

நடிகர் ஜான் விஜய் மனைவி பிரபல அரசியல்வாதியின் மகளா? க்யூட் குடும்ப புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ஜான் விஜய்யின் மனைவி பிரபல அரசியல்வாதியின் மகள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

'சூர்யா 42' படத்தின் மாஸ் டைட்டில்.. 1 நிமிட அனிமேஷன் வீடியோ.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'சூர்யா 42'. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

மகன்களுடன் 'லால்சலாம்' படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. படக்குழுவினர்களுக்கு வைத்த விருந்து..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது 'லால் சலாம்' என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தனது மகன்களை அழைத்து வந்துள்ளார்.

டார்க் சாக்லேட் கெட்டப்பில் ரம்யா பாண்டியன்.. வேற லெவல் போட்டோஷூட்..!

நடிகை ரம்யா பாண்டியன் அவ்வப்போது புதுப்புது போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் டார்க் சாக்லேட் கெட்டப்பில்