யோகிபாபு-அஞ்சலி படத்தின் டைட்டில் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,November 09 2020]

சந்தானம் நடித்த ’டிக்கிலோனா’படத்தை தயாரித்த கேஎஸ் சினிஷ் தயாரிக்கும் அடுத்த படத்தில் முக்கிய வேடங்களில் யோகி பாபு மற்றும் அஞ்சலி நடிக்க உள்ளனர் என்ற செய்தி வெளியானதை நேற்றே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

யோகிபாபு, அஞ்சலி நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ‘பூச்சாண்டி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை யோகிபாபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கிருஷ்ணன் ஜெயராஜ் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் விஷால் சந்திரசேகர் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

More News

கமலா ஹாரீஸ் உடன் கமல் பட நடிகை: வைரலாகும் புகைப்படம்!

அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் உள்பட பல இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்

பெற்றோருடன் அஜித்: வைரலாகும் புகைப்படம்!

தல என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது தான் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உள்ளார் என்பதும் த

அரசியல் தோல்வியைத் தொடர்ந்து குடும்பத்திலும் தோல்வியா??? ட்ரம்ப்பை சுற்றும் அடுத்த பரபரப்பு!!!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டெனால்ட் ட்ரம்ப் கடுமையான தோல்வியை தழுவினார்.

சூப்பர்ஸ்டார் நடிகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் பொதுமக்களை ஆட்டுவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சாதாரண குடிமக்கள் முதல் மக்களால்

குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்படவில்லையா சுரேஷ்? அதிர்ச்சி தகவல்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சுரேஷ்தான் வெளியேற போகிறார் என சனிக்கிழமை தகவல் வந்த போது கிட்டத்தட்ட யாருக்குமே நம்பிக்கையில்லை.