'தளபதி 65' படத்திற்காக இத்தனை நாள் கால்ஷீட் கொடுத்தாரா பூஜா ஹெக்டே?

  • IndiaGlitz, [Thursday,March 11 2021]

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கவுள்ள 'தளபதி 65' திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

'தளபதி 65' படத்திற்காக பூஜா ஹெக்டேவுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் 50 நாட்கள் இந்த படத்திற்காக கால்ஷீட் கொடுத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ‘தளபதி 65’ படத்திற்கு விஜய்யே 60 முதல் 70 நாட்கள் தான் கால்ஷீட் கொடுத்திருப்பதாக கூறப்படும் நிலையில் பூஜா ஹெக்டே 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்பதால், விஜய் மற்றும் பூஜாவின் காட்சிகள் இந்த படத்தில் மிக அதிகம் இருக்கும் என்றும் குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகளும் அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியலில் பூஜா ஹெக்டே உள்ள நிலையில் மீண்டும் தற்போது தளபதி விஜய்யுடன் தமிழ் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார். இந்தப் படம் வெளியான பிறகு அவருக்கு கோலிவுட் திரையுலகில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

‘தளபதி 65’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார் என்பதும் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தேர்தல் துளிகள்: 11 மார்ச் 2021

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆட்சியில் இருந்துவந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இறுதி நேரத்தில் கலைக்கப்பட்டது.

குவிந்து கிடக்கும் தங்கம்… குஷியில் கூட்டம் கூட்டமாக அள்ளிச் செல்லும் மக்கள்… அதிர்ச்சி வீடியோ!

தங்கத்தின் விலை உச்சியைத் தொட்டு இருக்கும்போது, ஒரு மலை முழுக்க தங்கம் கொட்டிக் கிடக்கிறது

'திரெளபதி முத்தம் தட்டான் தட்டான்': 'கர்ணன்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கர்ணன்'. இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருக்கும்

மனைவி, மூன்று குழந்தைகளுடன் செல்வராகவன்: வைரல் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும் அவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதும் தெரிந்ததே.

'குக் வித் கோமாளி' மணிமேகலைக்கு என்ன ஆச்சு? வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

'குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்களில் ஒருவர் மணிமேகலை என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மணிமேகலை இரண்டு வாரங்கள் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர முடியாத