நலிந்த மக்களுக்காக அறக்கட்டளை… நடிகை பூஜா ஹெக்டேவின் சேவைக்கு குவியும் வாழ்த்து!

  • IndiaGlitz, [Wednesday,July 28 2021]

தளபதி விஜய்யின் 65 ஆவது திரைப்படமான “பீஸ்ட்” திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இதற்கு முன்பே தமிழில் இவர் “முகமூடி” படத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து “All about Love“ எனும் அறக்கட்டளை துவங்கி இருப்பதாக நடிகை பூஜா தகவல் வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட அவர், மக்கள் எனக்கு கொடுக்கும் பணத்தை எதாவது ஒரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். எனவே கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே அறக்கட்டளையை துவங்கி விட்டேன். ஆனால் இந்த அமைப்பின் மூலம் எந்தவொரு பணியையும் செய்யாமல் அதுகுறித்து பேசவிரும்பவில்லை.

தற்போது கொரோனா நேரத்தில் “All about Love“ அறக்கட்டளை மூலம் பல நூற்றுக்கணக்கான நலிந்த குடும்பங்களுக்கு பொருளாதார உதவியை செய்திருக்கிறோம். இதைத்தவிர மருத்துவசதி, ரேஷன் பொருட்களை கொடுத்து உதவி இருக்கிறோம். எனவே சேவை மையத்தை குறித்து சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன் என நடிகை பூஜா ஹெக்டோ தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா நேரத்தில் அன்பு இந்த உலகத்தில் எவ்வளவு பெரிய உணர்ச்சி மற்றும் சக்தி என்பதை உணர்ந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் நாம் காட்டும் சிறிய அன்பு ஒருவரின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும் என்றும் கூறி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் “அல வைகுந்த புரம்மலு“ எனும் படத்திலும் பிரலப நடிகர் பிரபாஸ்ஸுடன் இணைந்து “ராதே ஷ்யாம்” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதைத்தவிர இந்தியில் முன்னணி இடத்தை பிடித்து இருக்கும் இவர் சமீபத்தில் சல்மான் கான், ரன்வீர் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நலிந்த மக்களுக்காக சேவை மையம் துவங்கி இருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் முயற்சிக்கு அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

More News

சென்னை to பாண்டி வரை சைக்கிளிங் செய்த நடிகர் ரகுமான்… வைரல் புகைப்படங்கள்!

சினிமா நட்சத்திரங்கள் பலரும் உடற்பயிற்சி மற்றும் வொர்க் அவுட் விஷயத்தில் தனி அக்கறை செலுத்தி வருகின்றனர்.

ஒரே இரவில் 20 வருடத்தை மறந்த நபர்: நிஜத்தில் ஒரு 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்'

அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயதான நபர் ஒருவர் ஒரே இரவில் 20 வருட வாழ்க்கையை மறந்து விட்டதாகவும் தற்போது அவர் 16 வயது பள்ளிச் சிறுவன் போல் செயல்படுவதாகவும் வெளிவந்திருக்கும்

ஆர்யா மீது ரூ.71 லட்சம் மோசடி புகார் கொடுத்த இளம்பெண்: பெரும் பரபரப்பு

நடிகர் ஆர்யா மீது ரூ.71 லட்சம் மோசடி புகார் கொடுத்த பெண் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

"பொன்னியின் செல்வன்" புதுச்சேரியில்.....!இணையத்தில் வைரலாகும் ஷூட்டிங் போட்டோஸ்....!

இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் இணையத்தையே கலக்கி வருகின்றன

4 ஆண்டுகள் கிடப்பில் இருந்த ஜிவி பிரகாஷ் படம்: ஓடிடியில் ரிலீஸா?

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்து முடித்து நான்கு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது