close
Choose your channels

'பீஸ்ட்' நாயகி பூஜா ஹெக்டேவின் 'தூரிகை தூரிகை' பாடல் ரிலீஸ்!

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே தெலுங்கில் பிரபாஸ் நடித்துவரும் ’ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’ராதே ஷ்யாம்’ படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’தூரிகை தூரிகை’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே தோன்றும் இந்த மெலடி பாடல் முதல் முறை கேட்கும்போதே அனைவரின் மனதை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில், மதன் கார்க்கி பாடல் வரிகளில், சித் ஸ்ரீராமின் மயக்கும் குரலில் இந்த பாடல் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ராதே கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.