வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் பூஜா ஹெக்டே? ஹீரோ யார் தெரியுமா?

வெங்கட் பிரபு இயக்கிய ‘மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனதை அடுத்து அவரது இயக்கத்தில் உருவான ’மன்மதலீலை’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கும் அடுத்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

‘மாநாடு’ ’மன்மதலீலை’ படங்களை அடுத்து வெங்கட்பிரபு இயக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவரது அடுத்த படம் ஒரு முழுக்க முழுக்க ரொமான்ஸ் படம் என்றும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா ஹீரோவாகவும், பூஜா ஹெக்டே ஹீரோயினியாகவும் இருவரும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே நாகசைதன்யா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பதும், தற்போது மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

பூஜா ஹெக்டே நடித்த தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’, பிரபாஸின் ’ராதே ஷ்யாம்’ சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ ஆகிய மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.


 

More News

தண்ணீருக்குள் இருப்பதுதான் பாதுகாப்பு: அண்டர்வாட்டரில் பிரபல நடிகையின் பிகினி போட்டோஷூட்!

பிரபல நடிகை ஒருவர் பிகினி உடையில் அண்டர்வாட்டரில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து 'சில நேரங்களில் தண்ணீருக்குள் இருப்பது மட்டுமே பாதுகாப்பு' என்று கேப்ஷனாக

ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்ட கார்த்தியின் சூப்பர்ஹிட் படம்: டிரைலர் ரிலீஸ்!

பிரபல நடிகர் கார்த்தி நடித்த சூப்பர்ஹிட் திரைப்படம் ஒன்று ரஷ்ய மொழியில் டப் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் தற்போது ரிலீசாகி உள்ளது. 

மீண்டும் ஜெய்யுடன் ஒரு படம்: பிரபல இயக்குனர் அறிவிப்பு!

பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவான 'வீரபாண்டியபுரம்' என்ற திரைப்படம் நேற்று வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன

பிரசித்திப் பெற்ற கோவிலில் தரிசனம் செய்த விக்கி- நயன்தாரா ஜோடி… வைரல் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து

19 வருடங்களுக்கு பின் பிரசன்னாவுடன் ஜோடி சேரும் நடிகை: ரசிகர்கள் வாழ்த்து!

19  வருடத்திற்கு பின் ஜோடி சேரும் நட்சத்திரங்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.