close
Choose your channels

பூஜா ஹெக்டேவின் அடுத்த பட டிரைலர்.. செம கலர்புல் என ரசிகர்கள் பாராட்டு!

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே தளபதி விஜய்யுடன் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பூஜா ஹெக்டே நடித்த பாலிவுட் திரைப்படமான ’சர்க்கஸ்’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மூன்று நிமிடத்திற்கும் மேலாக உள்ள இந்த ட்ரைலர் செம கலர்ஃபுல்லாக இருப்பதாகவும், படம் முழுவதும் சர்க்கஸ் காட்சிகளுடன் கூடிய காமெடி காட்சிகளும் நிறைந்திருப்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் அஜய்தேவ்கான் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ரோஹித் ஷெட்டி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.