சமந்தாவை ஓவர்டேக் செய்த பூஜா ஹெக்டே: பனிப்போர் தொடர்வதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,July 17 2020]

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்கும் பனிப்போர் நடந்தது என்பது தெரிந்ததே. சமந்தா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திடீரென தனது சமூக வலைத்தள கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் தனது சமூக வலைத்தள கணக்கை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பூஜா விளக்கம் அளித்தார்

ஆனால் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத சமந்தாவின் ரசிகர்கள் பூஜாவை கடுமையாக விமர்சனம் செய்தனர் என்பதும் பூஜாவின் ரசிகர்களும் இதற்கு பதிலடி கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருக்கும் பனிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டது 

இந்த நிலையில் தற்போது சமந்தாவை பூஜா ஹெக்டே ஓவர்டேக் செய்துள்ள தகவல் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. இன்ஸ்டாகிராமில் பூஜா ஹெக்டேவுக்கு 11 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். பூஜாவின் போட்டியாளரான சமந்தாவுக்கு 10.8 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இதனால் சமந்தாவை ஃபாலோயர்கள் விஷயத்தில் பூஜா ஹெக்டே ஓவர்டேக் செய்துவிட்டதாக பூஜாவின் ரசிகர்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து சமந்தா ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்

பிரபாஸ் நடிக்க உள்ள ‘ராதே ஷ்யாம்’ என்ற படத்தில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி என்று அறிவிக்கப்பட்டதால் அவருக்கு ஃபாலோயர்கள் திடீரென குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சமந்தா மிக நெருக்கத்தில் உள்ளதால் விரைவில் பூஜாவை அவர் ஓவர்டேக் செய்வார் என்று சமந்தா ரசிகர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்

More News

வொர்க் ஃபிரம் ஹோமுக்காக சொந்த ஊர் வந்தவர் ஜெயிலுக்கு போன பரிதாபம்: கள்ளக்காதலியால் விபரீதம்

சென்னையிலிருந்து வொர்க் ஃபிரம் ஹோமுக்காக சொந்த ஊர் வந்தவர் கள்ளக்காதலியால் பரிதாபமாக சிறைக்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

கணவர் என கூறி கள்ளக்காதலனுடன் கொரோனா தடுப்பு முகாமில் தங்கிய பெண் போலீஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் ஒருவர் தனிமைபடுத்தபட்ட அறையில் கணவர் என கூறி கள்ளக்காதலனை வரவழைத்து தங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம்: உதயநிதியுடன் மீராமிதுன்

பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான மீராமிதுன் கடந்த சில நாட்களாக தனது சமூக வலைப்பக்கத்தில் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

தாத்தா கனவுல வந்து அடிப்பாரு! கண்ணதாசம் பேரனிடம் கூறிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்து வரும் 'டாக்டர்' படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்ற நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'செல்லம்மா' என்ற பாடல்

அனிருத்-சிவகார்த்திகேயன் இணைந்த 'டாக்டர்' படப்பாடல் வைரல்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் 'டாக்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் மீண்டும் தொடங்க உள்ள நிலையில்