சூப்பர் சிங்கர் மேடையில் டிஜேவுக்கு டோஸ் விட்ட பூஜாவின் அம்மா.. உண்மையா? பிராங்க்கா?

  • IndiaGlitz, [Saturday,March 04 2023]

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை சுவாரசியப்படுத்துவது டிஜே பிளாக் என்பதும் அவரது டைமிங் காமெடி மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பூஜாவுக்கு டிஜே பிளாக் போட்ட பாடல்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென பூஜாவின் அம்மா டிஜே பிளாக்கை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போட்டியாளரான பூஜா மீது காதல் வலை வீசும் பாடல்களை அவ்வப்போது டிஜே பிளாக் போட்டு வருகிறார். இந்த நிலையில் பூஜாவின் அம்மா மற்றும் அவருடைய குடும்பத்தினர் இந்த வாரம் மேடை ஏறிய நிலையில் பூஜாவுக்கேற்ற ஒரு பாடலை டிஜே பிளாக் பிளே செய்கிறார். அப்போது பூஜாவின் அம்மா, ‘எனக்கு டிஜே மீது கொஞ்சம் மனம் வருத்தம், எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குது, அவர் ஒரு பெண் பிள்ளை, எல்லாத்தையும் மனதில் வைத்துக்கொண்டு பாடல் போடணும் என்று பிளாக்கிடம் கோபமாக பேசினார்.

எல்லோருக்கும் போடுகிற மாதிரி தான் பூஜாவுக்கு போட்டேன் என பிளாக் விளக்கம் சொல்ல, ஆனாலும் இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது என பூஜாவின் அம்மா கடுமையாக கூறினார். இதனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரியங்கா மற்றும் மாகாபா உள்பட அனைவரும் அப்செட் ஆகியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பூஜாவின் அம்மா உண்மையாகவே கோபப்பட்டாரா? அல்லது என்று ரசிகர்களை முட்டாள் ஆக்கும் வகையில் இது பிராங்க் என்று கூறுவார்களா? என்பது நாளைய நிகழ்ச்சியில் தான் தெரிய வரும்.

More News

விஜய் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம்.. மணப்பெண் இந்த நடிகையா? வைரல் புகைப்படங்கள்..!

விஜய் டிவி சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் ஒருவர் சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

'எதிர்நீச்சல்' சீரியலில் திடீரென எண்ட்ரி ஆன 80களின் நடிகை.. யார் இவர் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' என்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த சீரியலில் 80களில் திரைப்படங்களில் நடித்த நடிகை எண்ட்ரி

பணம் என்றால் எல்லாருமே பேய்கள்தான்! பண்பாட்டில் உயர்ந்ததாம் இந்த தேசம்.. பிரபல இசையமைப்பாளர் ஆவேசம்..!

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அவலங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை

ஆடலாமா மாமு.. ஆடலாமா.. கபடி கபடி கபடி.. 'வாரிசு' டெலீட்டட் சீன்..!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் 50 நாட்களைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்

கோலாகலமாக நடந்த தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ரோபி நிகழ்ச்சி..!

தி கார்னர் சீட்ஸ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலின் ட்ரோபி நிகழ்ச்சி பிப்ரவரி 15ஆம் தேதி கோலாகலமாக நடந்தது. இதில் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இசையமைப்பாளர் வித்யாசாகர், படத்தொகுப்பாளர் B.லெனின்