close
Choose your channels

எம்பரர் ரஜினி, கிங்மேக்கர் அஜித், ரூலர்ஸ் விஜய்: பிரபல நடிகையின் பதில்!

Monday, May 18, 2020 • தமிழ் Comments

ரஜினியை எம்பரர் என்றும், அஜித்தை கிங் மேக்கர் என்றும், விஜய்யை ரூலர்ஸ் என்றும் பிரபல நடிகை தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

தமிழில் சேவல் என்ற படத்தில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா, அதன்பின் தெனாவெட்டு, தம்பிக்கோட்டை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்பட ஒருசில படங்களிலும் பல மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த கொரோனா ஊரடங்கு விடுமுறையில் படப்பிடிப்பு இன்றி வீட்டில் இருக்கும் பூனம்பாஜ்வா, சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ரஜினி, அஜித், விஜய் குறித்த கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.

மெர்சல் படத்தில் எம்ஜிஆர் மற்றும் விஜய் தோன்றும் ஒரு காட்சியின் புகைப்படத்துடன் விஜய் குறித்து கேள்வி கேட்ட ரசிகருக்கு ‘அன்றும் இன்றும் ரூலர்ஸ்’ என்று பதிலளித்தார். அதேபோல் அஜித் குறித்த கேள்விக்கு கிங்மேக்கர் என்றும் ரஜினி குறித்த கேள்விக்கு ’இந்தியாவின் மிகப்பெரிய எம்பரர்’ என்றும் பதிலளித்தார்.

மேலும் மகேஷ்பாபுவை ஸ்டைலிஷ் ஹீரோ என்றும், ஆந்திர முதல்வர் ஜெகந்நாதன் ரெட்டியை ‘கிரேட் லீடர்’ என்றும், நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்றும், ஷாருக்கானின் ‘உலக சூப்பர் ஸ்டார்’ என்றும் வர்ணித்துள்ளார்.
 

Get Breaking News Alerts From IndiaGlitz