ஜி.வி.பிரகாஷின் 'குப்பத்து ராஜா'வில் நாயகியாகும் பிரபல நடிகை

  • IndiaGlitz, [Saturday,April 01 2017]

பிரபல ஒளிப்பதிவாளர் பாபா பாஸ்கர் இயக்கும் முதல் படமான 'குப்பத்து ராஜா' என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கவுள்ளார் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக பூனம் பாஜ்வா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே சுந்தர் சியின் 'அரண்மனை 2', 'முத்தின கத்தரிக்காய்' உள்பட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ் உடன் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையமைக்கின்றார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ,ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகவுள்ள இந்த படத்தை கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

More News

சி.ஆர்.சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு. ஆர்.கே.நகர் மக்கள் ஆத்திரம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தபோது அக்கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த சி.ஆர்.சரஸ்வதி 'அம்மா இட்லி சாப்பிட்டார், நலமாக இருக்கின்றார்.

ரஜினி பட டைட்டிலில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஜய் ஆண்டனி.

திருநங்கைகளுக்காக ராகவா லாரன்ஸ் செய்யவுள்ள உதவிகள்

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளரான ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டுமின்றி பல சமூக சேவைகள் செய்து வருகிறார்.

ரஜினியுடன் லைகா நிறுவனத்தின் ராஜூமகாலிங்கம் சந்திப்பு

லைகா நிறுவனம் ஈழத்தமிழர்களுக்காக இலங்கையில் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள இருந்து, பின்னர் அவர் அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

ஜோசியம் சொன்னால் கடும் நடவடிக்கை. ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தேர்தல் என்று வந்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போன்று தான் காட்சி அளிக்கும்.