ரஜினியுடன் முன்னாள் மத்திய அமைச்சரின் மகள் சந்திப்பு

  • IndiaGlitz, [Monday,August 07 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக மற்றும் தேசிய தலைவர்கள் அவரை அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். மேலும் ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன் அவரை எப்படியாவது தங்கள் கட்சிக்கு இழுக்கவும் சில கட்சிகள் முயற்சி செய்து கொண்டு வருகின்றன.
அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக பாஜக ரஜினிக்கு தூண்டில் போட்டு வரும் நிலையில் நேற்று முன்னாள் மத்திய அமைச்சர் புரமோத் மகாஜனின் மகளும், பா.ஜ.க-வின் இளைஞர் பிரிவான 'பாரதிய ஜனதா யுவ மோர்சா'வுக்குத் தலைவருமான பூனம் மகாஜன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து பூனம் மகாஜன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவிக்கும்போது, "நான் சந்தித்ததில் மிக எளிமையான ஜோடி, லதா ஜி அண்ட் தலைவா" என்று பதிவு செய்ததோடு, ரஜினி மற்றும் லதாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

More News

மின்சாரம் பாயும் இடைவேளை காட்சி: விவேகம் குறித்து கபிலன்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படம் வரும் 24ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் எழுதியது மட்டுமின்றி திரைக்கதை விவாதத்திலும் கலந்து கொண்ட கபிலன் வைரமுத்து தனது அனுபவங்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எங்க அம்மாவுக்கு மட்டுமே உரிமையுண்டு: கமல் கண்டிப்புக்கு காயத்ரி கண்டனம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் நேற்று அனைத்து பங்கேற்பாளர்களையும் ஒரு பிடி பிடித்தார். குறிப்பாக காயத்ரியிடம் கெட்ட வார்த்தை பேசியது குறித்து கொஞ்சம் கடுமையான கண்டிப்புடன் நடந்து கொண்டார். அப்பொழுதே காயத்ரியின் முகம் சுருங்கியதை பார்க்க முடிந்தது...

கமல்ஹாசனின் கண்டிப்பால் களைகட்டிய பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக பாரபட்சமாகவும், ஒருசிலர் செய்யும் தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஓவியாவின் வெளியேற்றத்திற்கு பின்னர் இந்த குற்றச்சாட்டு மிக அதிகமாகியது...

கமல்ஹாசனின் 'வெற்றி விழா'வுக்கு கிடைத்த வெற்றி வசூல்

சூப்பர் ஹிட் ஆன பழைய படங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீரிலீஸ் செய்யும் வழக்கம் தமிழ்த்திரையுலகில் கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது...

'பாகுபலி 2', பைரவாவுக்கு அடுத்த இடத்தை பிடித்த 'விக்ரம் வேதா'

இந்த ஆண்டில் முதல் மூன்று வாரத்தில் அதிக வசூல் செய்த படங்களாக எஸ்.எஸ்.ராஜமெளலியின் பிரமாண்டமான படமான 'பாகுபலி 2' முதல் இடத்திலும் தளபதி விஜய்யின் 'பைரவா' படம் இரண்டாவது இடத்திலும் உள்ளது...