close
Choose your channels

நடிகை பூர்ணா மிரட்டல் விவகாரத்தில் காமெடி நடிகருக்கு தொடர்பா? அதிர்ச்சி தகவல்

Tuesday, June 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ முதல் ‘காப்பான்’ வரை பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாக அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் முதலில் நான்கு பேர்களும் அதன் பின்னர் மூன்று பேர்களும் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர்

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 7 பேரிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர்களில் ஒருவரது மொபைல் போனில் பிரபல மலையாள காமெடி தர்மஜன் என்பவரது மொபைல் எண் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி அந்த மொபைல் எண்ணுக்கு அடிக்கடி கைது செய்யப்பட்டவர் மொபைல் போனில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து காமெடி நடிகர் தர்மஜனை ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பினர். இதனையடுத்து போலீசார் முன் ஆஜராகி தர்மஜன் விளக்கம் அளித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது ’பூர்ணாவை மிரட்டிய கும்பலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னுடைய புரொடக்ஷன் மேனேஜர் ஒருவர் மூலமாக என்னுடைய மொபைல் நம்பரை வாங்கி அந்த நபர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் என்னிடம் தொடர்பு கொண்டார். அந்த நபர் பூர்ணா மற்றும் மியா ஜார்ஜ் ஆகியோர்களை மிரட்டவிருப்பதாகவும், அவர்களது மொபைல் எண்கள் வேண்டும் என்றும் என்னிடம் கூறினார்

முதலில் காமெடியாக யாரோ பேசுவதாக நினைத்து அவரிடம் பேசுவதை தவிர்த்தேன். அதன் பின்னர் அடிக்கடி அவர் போன் செய்ததால் போலீசில் புகார் செய்துவிடுவதாக மிரட்டினேன். அதன் பிறகு அந்த நபர் என்னை தொடர்பு கொள்ளவில்லை என்று கூறினார்

நடிகை பூர்ணா மிரட்டல் விவகாரத்தில் காமெடி நடிகர் ஒருவரின் பெயர் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளிவந்த தகவலால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.