தமிழகத்தில் ஆபாச படம் பார்த்த 3000 பேர் லிஸ்ட் தயார்: விரைவில் விசாரணை

உலகிலேயே அதிகமாக ஆபாசப்படம் பார்ப்பவர்கள் இந்தியர்கள் தான் என்று சமீபத்தில் அமெரிக்க நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்த பட்டியலை அந்நிறுவனம் இந்திய அரசுக்கு அனுப்பி இருந்த நிலையில் அந்தப் பட்டியலின்படி இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக நபர்கள் ஆபாச படம் பார்த்து உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் ஆபாசம் படம் பார்த்த 3000 பேர் கொண்ட பட்டியல் தற்போது தயாராக இருப்பதாகவும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ரவி அவர்கள் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த 3000 பேர் கொண்ட பட்டியலில் நாமும் இருக்கின்றோமா? என்ற அச்சம் பலரது மனதில் எழுந்து உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறது கூறி காவல்துறையினர் மிரட்டி இளைஞர் ஒருவரிடம் பணம் பறிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருநெல்வேலி காவலர் ஒருவர் இளைஞர் ஒருவரை செல்போனின் மிரட்டுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்தபோது ’3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, முறையாக காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப் படுவார்கள் என்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டுவதை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். ஆபாச படம் பார்த்தவர்கள் பட்டியல் விரைவில் வெளியாக இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

உலகில் பாலியல் வன்கொடுமைகளுக்கு தலைநகராக இந்தியா உள்ளது - ராகுல் காந்தி.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகி விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்தார்

நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த போலீஸ் புகார்: பிரபல இயக்குனர் கைது!

சமீபத்தில் வெளியான 'அசுரன்' படத்தில் நாயகியாக நடித்திருந்த பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் சமீபத்தில் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான ஸ்ரீகுமார்

திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் குற்றமா? சென்னை ஐகோர்ட் கருத்து

கோவையை சேர்ந்த தனியார் விடுதி ஒன்றில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரு அறையில் தங்கி இருந்ததாக குற்றம் சாட்டி வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது

காவலன் செயலி மூலம் தமிழகத்தில் 2 பேர் கைது..!

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மிகுந்த அக்கறையுடன் பல காரியங்களைச் செய்து வருகிறது அதில் விழிப்புணர்வூட்டும் காவலன் செயலி ஒன்று. அதன் செயல்பாடு பரவலாக்கப்பட்ட

இந்த நாளை குறித்து வைத்து கொள்ளுங்கள்: என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்த நால்வரை நேற்று தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.