close
Choose your channels

ஒரே வார இடைவெளியில் மேலும் ஒரு ஆபாச நடிகை மர்ம மரணம்

Saturday, December 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த வாரம் கனடாவை சேர்ந்த 23வயது ஆபாச நடிகை ஆகஸ்ட் அமீஸ் என்பவ்ர் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார் என்றும் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் வெளிவந்த செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் ஆகஸ்ட் அமீஸ் மரணம் அடைந்த ஒரே வாரத்தில் அமெரிக்காவை சேர்ந்த இன்னொரு ஆபாச நடிகை மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த 31 வயது ஆபாச நடிகை யூரிசான் பெல்ட்ரான் (Yurizan Beltran) என்பவர் தான் தங்கியிருந்த விடுதியில் மரணம் அடைந்த நிலையில் இருந்ததாக அவருடன் பணிபுரியும் அவரது நெருங்கிய தோழி உறுதி செய்துள்ளார். மேலும் அவரது படுக்கையில் போதை மாத்திரைகள் சிதறிக்கிடந்ததால் அவர் அளவுக்கு அதிகமாக போதை மாத்திரை உட்கொண்டதால் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.