விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன்: தமிழ் நடிகர் சவால்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து அந்த தொகுதியில் நான் போட்டியிடுவேன் என தமிழ் நடிகர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் என்றும், விஜய் ஒரு தொகுதியில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் அவரது தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், "விஜய் எந்த கட்சியில் இருந்தாலும், எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன்," என்று தெரிவித்துள்ளார்.
*"விஜய் என்னுடைய கூட பிறந்த தம்பி மாதிரி. ஒரு ஆடியோ லாஞ்சில் அவரை நான் சந்தித்து அரை மணி நேரம் பேசினேன். அப்போது, 'உலகம் முழுவதும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள், ஆனால் என் வீட்டில் என் பையன் உங்கள் ரசிகர் தான் என்று கூறியபோது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அந்த அளவுக்கு அமைதியாக இருந்தவர், இப்போது மேடையில் பயங்கரமாக டயலாக் பேசுகிறார்.
களத்திற்கு வாருங்கள்! களத்திற்கு வந்தால் மட்டுமே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க முடியும். கூட்டம் எனக்கு கூட தான் கூடுகிறது. கூட்டத்தை வைத்து எதையும் நிர்ணயிக்க முடியாது. எனக்கும் ரசிகர்கள் பலர் பேர் இருந்தனர். அதை வைத்து நானும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டேன். ஆனால் சில காரணங்களால் அது முடியவில்லை," என்று கூறினார்.
மேலும், "2026ல் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும், நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். ஏதாவது ஒரு பெரிய கட்சி அழைத்தால் அந்த கட்சியின் சார்பில் போட்டியிடுவேன். இல்லையென்றால் சுயேச்சையாக விஜய் நிற்கும் தொகுதியில் போட்டியிடுவேன்," என்று தெரிவித்தார்.
*"மக்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லாமல், ‘இவர்தான் எதிரி’ என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்கிறார் விஜய். இது ரொம்ப தவறு. விஜய் எதிர்க்கும் கட்சிகள் 50 வருட அனுபவம் உள்ள கட்சிகள். அவருடைய வயதிற்கு சமமான அனுபவம் அந்த கட்சிகளுக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட கட்சிகளை எதிர்த்து பேசுவது தவறு.
தமிழக முதல்வரை நான் மிகவும் நேசிக்கிறேன். விஜய், தமிழக முதல்வர் பற்றி பேசும்போது, நான் ரொம்ப வருத்தப்பட்டேன்," என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments