close
Choose your channels

'வந்தேண்டா பவர்க்காரன்'. ரஜினி வேடத்தில் பவர் நடிப்பது உண்மையா?

Saturday, July 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் நடித்த லிங்கா' படம் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்ட கொடுத்ததாக கூறப்படும் பிரச்சனையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் தயாராகவிருப்பதாகவும், அந்த படத்தில் பவர்ஸ்டார் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் வெளிவந்த செய்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பவர்ஸ்டார் சமீபத்தில் கூறியபோது, 'லிங்கா பட பிரச்சனையை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படத்தில் நான் நடிப்பது உண்மைதான். ஆனால் நான் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது போட்ட ஒரே கண்டிஷன், எந்த காரணத்தை முன்னிட்டும் தலைவரை அவமானப்படுத்தும் ஒரு காட்சி கூட படத்தில் இருக்கக்கூடாது என்பதுதான். அதற்கு படக்குழுவினர் ஒப்புக்கொண்ட பின்பே ஒப்பந்தம் ஆனேன்.

இந்த படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக கொண்டது. தொடரந்து பல ஹிட் படங்களை கொடுத்து வரும் ஒரு நடிகர், திடீரென ஒரு ப்ளாப் படம் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை காமெடியாக கூறவுள்ளோம். இந்த படத்தில் ரஜினியின் புகழ்பெற்ற அறிமுகப்பாடலான 'வந்தேண்டா பால்காரன்' பாடலை போன்று 'வந்தேண்டா பவர்காரன்' என்ற பாடல் உள்ளது' என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான 'எலி' படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்த நடிகை சதா, இந்த படத்தில் பவர்ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.