close
Choose your channels

பவர்ஸ்டாரின் அடுத்த ஹீரோயின் அனுஷ்கா-த்ரிஷா?

Saturday, June 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பவர்ஸ்டார் நடித்து முடித்துள்ள 'அட்ரா மச்சான் விசிலு' திரைப்படம் ஜூலை 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' ஜூலை 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சூப்பர் ஸ்டார் கேரக்டரில் பவர்ஸ்டார் நடித்துள்ள இந்த படம் ஒரு வாரத்திற்கு முன்பே ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி தான் வசனம் பேசவில்லை என்றும், இயக்குனர் என்ன வசனத்தை கொடுத்தாரோ அதை மட்டுமே பேசியுள்ளதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் தனது லட்சியம் அனுஷ்கா மற்றும் த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று கூறிய பவர்ஸ்டார் ஒருவேளை அவர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் பெயரில் உள்ள வேறு நடிகைகளுடன் நடித்து தன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றி கொள்வதாகவும் அந்த பேட்டியில் பவர்ஸ்டார் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.