'பாகுபலி 2' படத்தின் பட்ஜெட் மற்றும் எதிர்பார்க்கப்படும் வசூல்

  • IndiaGlitz, [Friday,March 10 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி 'பாகுபலி' படத்தை இரண்டு பாகங்களாக இயக்க முடிவு செய்தபோது இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.200 முதல் ரூ.250 கோடி வரை பட்ஜெட் போடப்பட்டதாம். ஆனால் 'பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மேலும் பிரமாண்டமாக செலவு செய்ய படகுழுவினர் முடிவு செய்தனர்.
'பாகுபலி' உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூல் செய்த நிலையில் 'பாகுபலி 2' படத்திற்கு மட்டுமே தற்போது ரூ.243 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரம் மட்டுமே ரூ.500 கோடி ஆக வாய்ப்பு உள்ளது என்றும், ரூ.1000 கோடி வசூல் செய்யும் முதல் இந்திய படம் என்ற பெருமைய பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது.
ரூ.740 கோடி வசூல் செய்து இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ள படம் அமீர்கானின் 'பிகே'. இந்த படத்தின் வசூல் சாதனையை 'பாகுபலி' முறியடித்து புதிய சாதனை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஆசிட் தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு அஜித் பட வில்லன் செய்த உதவி

'தல' அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் வில்லனும் பிரபல பாலிவுட் நடிகருமான விவேக் ஓபராய் நடிகர் மட்டுமின்றி சிறந்த சமூக சேவகர் என்று அனைவராலும் போற்றப்படுபவர்.

சகோதரியை விட மிகப்பெரிய பரிசு இந்த உலகில் இல்லை. ஃபேஸ்புக் நிறுவனர் உருக்கம்

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்று கூறுவதுண்டு. உலகில் இன்று ஃபேஸ்புக்கில் கணக்கு இல்லாதவர்கள் மிகவும் குறைவு.

உலக அழகி நடிகையின் தந்தை கவலைக்கிடம். நலம் விசாரித்த சூப்பர் ஸ்டார்

முன்னாள் உலக அழகியும் பிரபல நடிகையும்  பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவியுமான ஐஸ்வர்யாராய் அவர்களின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது...

மொட்டை அடிக்கவும் தயார். அக்சரா ஹாசன் அதிரடி

கோலிவுட் திரையுலகில் தான் ஏற்று கொண்ட கேரக்டருக்காக மொட்டை அடிப்பது உள்பட எந்த வகையிலும் உருமாற தயங்காத ஒரு நடிகர் என்றால் அவர் உலக நாயகன் கமல்ஹாசன் ஒருவர்தான். புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற சொல்லிற்கேற்ப கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேரக்டருக்காக மொட்டை அடிக்கவும் தயார்

விக்ரம் அம்மாவாக கமல்-ரஜினி நாயகி?

சீயான் விக்ரம் நடிப்பில் 'வாலு' இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. விக்ரம், ஜோடியாக முதன்முதலாக இந்த படத்தில் தமன்னா இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது...