கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட போஸ்டர்

  • IndiaGlitz, [Sunday,October 23 2022]

‘பாகுபலி’ படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

முன்னணி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. கடின உழைப்பாளியும், விடா முயற்சியும் உள்ள நடிகரான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர்.

ராமாயண காவியத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில், அவர் ராமராக தோன்றும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகர் பிரபாஸின் ராம அவதார உருவப்படம், தெய்வீகம் ததும்பும் வகையில் அமைந்திருப்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

பிக்பாஸ் 6வது சீசனின் முதல் எலிமினேஷன் இவர் தான்: தொடரும் செண்டிமெண்ட்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த பொண்ணுக்கு 23 வயது இல்ல, மலேசியாவும் இல்ல.. 2ஆம் திருமணம் குறித்து மனம் திறந்த பப்லு!

நடிகர் பப்லுவுக்கு 55 வயது ஆகியிருக்கும் நிலையில் அவர் 23 வயது இளம் பெண்ணை திருமணம் செய்ய போகிறார் என்றும், அவர் திருமணம் செய்ய போகும் பெண் மலேசியாவை சேர்ந்தவர் என்றும்

பிரின்ஸஸ்-க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய 'பிரின்ஸ்' நாயகன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் இன்று அவரது பிரின்ஸஸ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

எவனாச்சும் முகத்தை பாக்குறானா? ஷிவானியின் ஹாட் போட்டோஷூட்டிற்கு குவியும் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும் சினிமா நடிகையுமான ஷிவானி நாராயணன் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்த

'சூர்யா 42' படத்தின் சூப்பர் அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் நடைபெற்றது என்பதும் இதனை அடுத்து படக்குழுவினர் தீபாவளி கொண்டாடுவதற்கான