close
Choose your channels

'சாஹோ' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

Thursday, August 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'சாஹோ' திரைப்படம் வரும் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலருக்கு கிடைத்த மில்லியன்கணக்கான பார்வையாளர்கள் இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் 'சாஹோ' திரைப்படத்தின் தமிழ்ப்பதிப்பின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் ரன்னிங் டைமை பெற்றுள்ளது. அதாவது 2 மணி 54 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும். மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் பிரபாஸ், ஷராதா கபூர், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், அருண்விஜய், கிஷோர், உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் பின்னணி இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மதி ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். சுமார் ரூ.350 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.