close
Choose your channels

பிரபாஸ் பிறந்த நாளில் வெளியான அட்டகாசமான டீசர்: வைரல் வீடியோ!

Saturday, October 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபாஸ் தற்போது ஆதி புருஷ், ‘ராதேஷ்யாம்’ ‘சலார்’ ‘ஸ்பிரிட்’ மற்றும் நாக் அஸ்வின் இயக்கும் திரைப்படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று பிரபாஸ் பிறந்தநாளை அடுத்து ’ராதே ஷ்யாம்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அந்த டீசரில்

நீ யாருன்னு எனக்கு தெரியும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்
உன் இதயம் உடைந்த சத்தம் எனக்கு கேட்கும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்
உன் தோல்வியை என்னால் பார்க்க முடியும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்
உன் மரணத்தின் வாசனையை என்னால் நுகர முடியும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்
எல்லாம் எனக்கு தெரியும்
ஆனாலும் சொல்ல மாட்டேன்
ஏனென்றால் என்னை உன்னால் புரிந்துகொள்ள முடியாது
என் பேரு விக்கிரமாதித்தா
நான் கடவுளும் இல்லை
உன்னை மாதிரியும் இல்லை

என்ற வசனம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த டீசரில் பிரபாஸின் அட்டகாசமான காட்சிகளும் உள்ளதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.