close
Choose your channels

வந்து கொண்டிருக்கின்றேன், அதர்மத்தை சர்வநாசமாக்க: பிரபாஸின் 'ஆதிபுருஷ்' டீசர்!

Monday, October 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘ஆதிபுருஷ்’ மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழ் உள்பட 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஓம் ரெளட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார் என்பதும், மேலும் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் அனைத்து மொழி டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

’வந்து கொண்டிருக்கிறேன் அதர்மத்தை சர்வ நாசம் செய்ய’ என்ற பிரபாஸின் ஆக்ரோஷமான வசனத்துடன் உள்ள இந்த டீஸரில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் அதிகமுள்ள இந்த படத்தை வட இந்தியர்கள் கொண்டாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.