வந்து கொண்டிருக்கின்றேன், அதர்மத்தை சர்வநாசமாக்க: பிரபாஸின் 'ஆதிபுருஷ்' டீசர்!

  • IndiaGlitz, [Monday,October 03 2022]

பிரபாஸ் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘ஆதிபுருஷ்’ மிகப்பெரிய பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழ் உள்பட 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஓம் ரெளட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார் என்பதும், மேலும் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ராமாயண கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த படத்தின் அனைத்து மொழி டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

’வந்து கொண்டிருக்கிறேன் அதர்மத்தை சர்வ நாசம் செய்ய’ என்ற பிரபாஸின் ஆக்ரோஷமான வசனத்துடன் உள்ள இந்த டீஸரில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளது. மேலும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் அதிகமுள்ள இந்த படத்தை வட இந்தியர்கள் கொண்டாடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

அஜித்தின் 'துணிவு' படத்தில் பிக்பாஸ் காதல் ஜோடியா?

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று

திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான 'சரவணன் மீனாட்சி' நடிகை: சீமந்த புகைப்படங்கள்!

திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சீரியல் நடிகை கர்ப்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

'பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவியின் நடிப்பு.. அண்ணன் மோகன்ராஜா என்ன சொன்னார் தெரியுமா?

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த ஜெயம் ரவியின் நடிப்பு குறித்து அவரது சகோதரரும் இயக்குனருமான மோகன் ராஜா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளது வைரலாகி வருகிறது. 

சினிமாவில் அறிமுகமாகும் பிக்பாஸ் தாமரை.. இந்த இருவரில் யார் ஹீரோ?

பிக் பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தாமரை தற்போது சினிமாவில் நடித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் நடிக்கும் படம்..  செம டைட்டில்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பாலாஜி என்பது தெரிந்ததே. இவர் அந்த நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்