பிரபுதேவாவின் 60வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,January 15 2023]

தமிழ் திரை உலகின் நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவாவின் 60வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த 1994 ஆம் ஆண்டு ’இந்து’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா, அதற்கு முன் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர், நடன இயக்குனர் மட்டுமின்றி தளபதி விஜய் நடித்த ’போக்கிரி’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களையும் அவர் இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் பிரபுதேவா இதுவரை 59 திரைப்படங்கள் நடித்துள்ள நிலையில் 60-வது படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வினோ வெங்கடேசன் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ராய் லட்சுமி நடித்த ‘சிண்ட்ரெல்லா’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு தேவா, அஞ்சு குரியன், ராய் லட்சுமி, அனுசியா பரத்வாஜ், ஸ்ரீ கோபிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வரும் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படம் வரும் மார்ச் மாதம் திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நீங்க தான் என் ஹீரோ.. என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனை: வம்சி வெளியிட்ட வீடியோ

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி 'என் வாழ்நாளில் இதுதான் மிகப்பெரிய சாதனை, நீங்கள் தான் என்னுடைய ஹீரோ' என்று கூறி பதிவு செய்துள்ள நெகிழ்ச்சியான வீடியோ

மீண்டும் மணிரத்னம் உடன் மோதும் தனுஷ்?

தனுஷ் நடித்த 'நானே வருவேன்' என்ற திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ரிலீஸ் தினத்தில் ரிலீஸ் ஆனது என்பதும் 'பொன்னியின் செல்வன்'

'பாட்ஷா'வுடன் கனெக்சன் ஆகிறதா 'லால் சலாம்'?: 28 ஆண்டுக்கு பின் ரஜினி ஏற்கும் கேரக்டர்!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' என்ற திரைப்படம் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போன்ற ஒரு கேரக்டரில் ரஜினிகாந்த், '

'காந்தாரா'வில் அந்த படத்தின் சாயல் உள்ளது: ரிஷப் ஷெட்டிக்கு கடிதம் எழுதிய கமல்ஹாசன்

சமீபத்தில் வெளியான ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் தெரிந்ததே.

செம கிளாமர்.. ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்டை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்!

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷிகண்ணாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.