மொட்டைத்தலை, மூன்று கண்ணாடி: பிரபுதேவா அடுத்த படத்தின் அசத்தும் ஃபர்ஸ்ட்லுக்

  • IndiaGlitz, [Friday,February 14 2020]

பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று இரவு 7 மணிக்கு நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது இந்த போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. ‘பாஹிரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டரை தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுவரை இல்லாத வகையில் பிரபுதேவா வித்தியாசமான தோற்றத்துடன் இந்த போஸ்டரில் உள்ளார். மொட்டை தலையில் ரத்தம் சொட்ட சொட்ட மூன்று கண்ணாடிகள் அணிந்து வித்தியாசமாக இருக்கும் இந்த போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பிரபுதேவாவின் பின்னணி முழுவதும் வெறும் கண்களால் உள்ளது மிரட்டும் வகையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கணேசன் சேகர் இசையில் அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை பரதன் தயாரித்து வருகிறார் இந்தப்படம் பிரபுதேவாவுக்கு ஒரு நல்ல திருப்புமுனையை கொடுக்கும் என்றும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ரீஎன்ட்ரீ படமாக இந்தப் படம் இருக்கும் என்றும் கருதப்படுகிறது.